விந்தன் ராஜ் கவிதை ஒரு சிறு அலசல் --கவின் சாரலன்

"எழுத்து
அ ஆ தமிழ் எழுத்து
இதுவும் கவிதை தான்"

யாது கருதி இவ்வரிகளை கவிஞர் எழுதினார்
என்று சிந்தித்தேன் அ ஆ என்று இரண்டு
அட்சரங்களை விட்டெறிந்து விட்டு இதுதான்
கவிதை என்று சொல்லும் போக்கு பெருகிவிட்டது
என்று சொல்ல வருகிறாரா அல்லது அ ஆ தமிழ்
எழுத்து இதுவும் கவிதை தான் படிக்க வேண்டியது
உங்கள் தலை எழுத்து என்று பழி கரந்த அங்கதமாகச்
சொல்கிறாரா புரியவில்லை ஆராய்ச்சிக்
குழப்பத்தில் தள்ளிவிட்டார் ஆயினும் இவ்வாறாக
ஒரு கருத்தினை தெரிவித்தேன்

அ என்பது அறிவு
ஆ என்பது ஆறாம் அறிவு
அ என்பது அச்சம்
ஆ என்பது ஆற்றல்
அ என்பது அடக்கம்
ஆ என்பது ஆணவம்

ஔவையார் ஆத்திச்சூடியை அப்படித்தான் எழுதினர்

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம்

நாமும் எழுதலாம்


அன்பு செய்

ஆணவம் ஒழி

இனியவை சொல்

ஈ என்று இளியாதே

உண்மை பேசு

ஊருக்கு உழை

தொடரலாம்

அவும் ஆவும் கவிதை

இ என்பது இனிமை

எ என்பது எழுச்சி

அக்கன்னா ஆயுதம்

கவிப்பிரிய விந்தன் ராஜ் இதைத் தானே சொல்ல வந்தீர்கள்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-12, 3:55 pm)
பார்வை : 293

மேலே