சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
எவ்வளவோ உயர் படிப்புகள் வந்துவிட்டன..... எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்துவிட்டன..
ஆனாலும்
தற்கொலையைத் தடுக்க முடியாமல் -நாம்
தலைகுனிந்து நிற்கின்றோம்...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
எங்குபார்த்தாலும் காதலுக்கு ஆதரவு அலை...
எங்கு சென்றாலும் காதலர்கள் கூட்டம்...
ஆனாலும்
விவாகரத்துக்கு விடை தெரியாமல் -நாம்
விழித்துக் கொண்டிருக்கின்றோம் ...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
எவ்வளவோ கட்சிகள் எவ்வளவோகொள்கைகள்
எவ்வளவோ சங்கங்கள் எவ்வளவோ தலைவர்கள்.
ஆனாலும்
சமூக அவவலங்களை சமாளிக்க முடியாமல்-நாம்
சங்கடப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
மருத்துவமனைகள் பெருகிவிட்டன..
மருத்துவர்களும் பெருகிவிட்டார்கள்
சுகாதார மையங்களும் பெருகி விட்டன....
செவிலியர்களும் பெருகிவிட்டார்கள்
ஆனாலும்
புதுப் புது நோய்கள் பெருகிக்கொண்டே வருகின்றது.மருத்துவத் துறையே மன்றாடிக்கொண்டிருக்கின்றது...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
அதிகமான படிப்பு.. அதிகமான சம்பளம்..
அமைதியான குடும்பம்...
ஆனாலும்
நிம்மதியைத் தேடி நெறிதவறி சென்றுவிட்டு
நிம்மதியே இல்லாத வாழ்க்கை பலருக்கு...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
அரசின் அறிவுரைகள்,,,
நகராட்சியின் ஆலோசனைகள்...
புரியும்வகையில் கூறுகிறார்கள்....
ஆனாலும்
குப்பைதொட்டி வரை நடந்து வந்து
குப்பையை நம்மால் தொட்டியில் தூக்கி போட முடிய வில்லை...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
குடிபதற்கு குவாட்டர்.. அடிப்பதற்கு ஆப்..
மருத்துவர் முதல் மண்வெட்டி புடிக்கும்
தொழிலாளி வரை...தெரியும், இது உடலுக்கு ஆகாது என்று..
ஆனாலும்
அவற்றை விட மனதில்லாமல் அடிமனதில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் அன்றாடக் குடிமகன்கள் ...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
அந்நிய முதலாளிகள் இந்திய மண்ணை
அமுக்கப் போட்ட திட்டமே குளிர்பானம்...
நன்றாகத் தெரியும் நம் அனைவருக்கும்...
ஆனாலும்
அக்கா மாலாவும், கப்சியும் கெளரவம் என்ற பெயரில் நமை கொத்தடிமைகளாய் உருவாக்குகின்றன...
சொல்லுங்கள் நாம் எங்கே செல்கிறோம்....?
வல்லரசாம் இந்தியா.... நாம் வாய்கிழிய பேசுகிறோம் ...
வாழ்கையில் திருத்த முடியாத தவறுகள்...
வழிதவறிய பாதைகள்....
போனது போகட்டும்....
போனது போகட்டும்....
ஆனால்
திருத்த முடியாத தவறுகள்
என நாம் நினைத்தவற்றை
நாம் இன்றே திருத்திடுவோம்...