பித்தன்

நான்

பௌர்ணமியை விட்டுவிட்டு
அமாவாசையின் இருட்டான முகத்தை ரசிப்பவன்...
ஆயிரம் நட்சத்திரங்களுடன் நிலவிலா ஆகாயம் அழகுதான்!!

நான்

வைரங்களை விட்டுவிட்டு
பனித்துளிகளை ரசிப்பவன்...
புல்லின் நுனியில் பனித்துளி வைரம்
அழகுதான்!!!

நான்

இளமையின் வனப்பை விட்டுவிட்டு
முதுமையின் வயதை ரசிப்பவன்...
அன்னை தெரேசாவின் முகத்தில் சுருக்கங்களும்
அழகுதான்!!!

நான்

பூக்களை விட்டுவிட்டு
முட்களை ரசிப்பவன்...
மார்கழியில் முட்களின் முனையில் கூடபனித்துளி பூக்கள்
அழகுதான்!!!

முரண்பாடுகளின் முழு தோற்றம் அறிந்ததலோ என்னவோ

பித்தன் என்ன்பர்கள் என்னை!!!!!!!!!

எழுதியவர் : சரவணா (21-Apr-12, 2:26 am)
பார்வை : 299

மேலே