உயிர் எழுத்துக்கள்
“அ..ஆ..இ..ஈ..உ...ஊ...” என்று
ஊளையிடுவதாய்
உரைக்கும் நண்பரே!,கேளிர்!
இது ஒரு அருமையான கவிதை.
குழைந்தைகளின் குவா குவா!
அன்னையர் பாடினால் தாலாட்டு!
காதலர்கள் வாசித்தால் காதல் கவிதை!
இது வாலிபர்களின் அழகியின் சிரிப்பு !
கவிஞர்களின் அழகின் சிரிப்பு!
வள்ளுவர் எழுதினால் வாழ்க்கை தத்துவம்!
பாரதி பாடினால் பீரங்கி முழக்கம்!
நான் எழுதினால் மட்டும் ஊளையிடுதலா?
இவை என் தமிழ் தாயின் உயிர் எழுத்துக்களய்யா!

