வாழ்க்கையை தின்றுவிடும்

விஷப்பூச்சிகள்
காட்டில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன
வஷக்கிருமிகள்
சாக்கடையில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன

புத்தகங்களில்
புதைந்து கிடக்கின்றன
உயிரோடு.............
இணையதளங்களில்
அரிதாரம் பூசிக்கொண்டு
ஆடுகின்றன அழகோடு...

கவிதைகளாக
கட்டுரைகளாக
கருத்துக்களாக
.........................

அவருக்கோ வயது தொண்ணூறுக்குமேல்
அறியாமல் நுழைந்துவிட்டேன்
அவரது வலைதளத்தில்
அப்படியே ஆடிப்போனேன்
அத்தனை அழகிகளும்
அவரது வலைதளத்தில்
அத்தனை நடிகைகளும்
அவரது கவிதைகளில்
அன்றைய நடிகை எலிசபெத் முதல்
இன்றைய நடிகை ஹன்ஷிகா வரை
அவர்மேல் தவறில்லை
அவர் தளத்தில் நுழைந்தது தவறு


விஷப்பூச்சிகள்
காட்டில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன
வஷக்கிருமிகள்
சாக்கடையில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன

வாசிப்போர்களே!
வாசிப்பவைகளில்
வடிகட்டவில்லை என்றால்
வலைதளங்கள்கூட
வாழ்க்கையை தின்றுவிடும்.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (22-Apr-12, 1:46 pm)
பார்வை : 245

மேலே