பெண் பிறப்பு
மனதில் புழங்கி கிடக்கும் காதலை யாருக்கு புரியவைப்பேன்
தினம் தினம் செத்துக் கொண்டுதான் இருக்கிறேன்;
உயிர் மட்டும் உறவாடிக்கொண்டு தான் இருக்கிறது உனைத்தேடி;
பெற்றோருக்கு பயமே!
பிள்ளை பெற்ற நாள் முதல்;
தினம் தினம் ரணமே!
தவமாய் வந்தவள் தாலி ஏற்கும் வரை;
வயதின் வசியமோ?
இல்லை விதியின் விந்தையோ?
கவர்ந்தது ஒருவன் மனமே!!
எத்தனை நாள் தான் அவனிடம் நடிப்பேன்?
நீ என் நண்பன் மட்டும் தான் என்று
என்னையும் ஏமாற்றிக்கொண்டு;
உன்னை ஏமாற்றிக்கொள்ள உனக்கு விருப்பம் இல்லையோ?
மனம் விட்டு நீ பேச மடிந்து போனேன் நான்;
வந்தவன் எனை தாங்க
வாரிக் கொடுத்தேன் அன்பை;
பிள்ளை போல் எனை பார்க்க
தாயுமானவன் ஆனான்;
உறவினரின் உபத்திரமோ? இல்லை சமுதாயத்தின் சூழ்ச்சியோ?
அக்கரையின் அச்சமோ? இல்லை அனுபவதின் பாடமோ?
புரிந்து கொள்வாரா பெற்றோர்!
இல்லை பிரித்து விட்டு செல்வோரா?!
அவர்களிடமும் குற்றம் இல்லை;
இவனையும் நெஞ்சம் மறக்கவில்லை;
என்ன செய்வேன் நான்?
மனதில் ஒருவன், மணமேடையில் ஒருவன்
என மனம் மாற்றிக்கொள்ள
உள்ளம் என்ன தினம் மாற்றும் உடுக்கையா?
செத்து கொண்டுதான் இருக்கிறேன்;
தினம் செத்து கொண்டுதான் இருக்கிறேன்!
உயிர் மட்டும் உறவாடிக் கொண்டே தான் இருக்கிறது உன்னுடன்!
என்ன செய்வேன் நான்?
பெண்ணாய் பிறப்பின் பாவம் இதுவோ!!