பொற்பூ

நட்பனைய பூவினை நான்
நானிலத்தில் கண்டதில்லை.
ஏனைய பூக்களோ,
ஏதோ ஒரு பகல்அல்லது இரவில் மலர்ந்து,
கொணர்ந்த மணத்தினை கொடுத்து விட்டு
உலர்ந்து போகும்.
நட்போ பொற்பூ!!!
நானிலத்தார் கற்பு!!!!!
இப்பூ மனங்களில் மலர்ந்தால்,
இவ்வுலஹெங்கும் மணக்கும்.
கலகங்கள் பிணக்கும்.
உலகமே உற்சாக உவகையில் மிதக்கும்.
எனவே எல்லோரும் நட்பினையே கொள்க!

எழுதியவர் : பாலு குருசுவாமி. (24-Apr-12, 8:21 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 172

மேலே