வீழ்ந்தேன்
என் இலட்சியங்கள்
இல்லாமல் போனபோது......
என் கற்பனைகள்
கனவாய் போனபோது....
என் சோகங்கள்
எனை சோம்பேறி ஆக்கி போனபோது...
என் வெற்றிகள்
வெறிச்சோடி போனபோது....
இப்படி எத்தனையோமுறை
வீழ்ந்தேன்!!!
மண்ணோடு மடியும்
மழைத்துளியாய் அல்ல....
மண்ணைமுட்டி முளைக்கும்
விதையாய்♥♥♥♥