காதலியே !

அன்பு என்ற சொல்லின் அர்த்தம் நீயடி
உன் பூவிதழ் விரிசல் காண என் கண்கள் அலைபாயுதடி
உன் மீன் போன்ற கண் காண
என் மனம் ஏங்குதடி
சலசலக்கும் வலை ஓசை
என் காதில் ஒலிக்குதடி.
நீ என் உயிர் சுவாசம்
நீ விட்டு சென்ற சுவாசத்தில்
நான் உயிர் வாழ்வேன்.
எங்கு திரும்பினாலும்
உன் உருவம் தோன்றுதடி
இறப்பது உன் மடி என்றால்
மரணமும் எனக்கு பூ மெத்தை
உன்னை சிறை கொண்டேன்
என் இதயத்தில்
தப்பித்து விடாதே
என் கண்ணீர் வழியே !

எழுதியவர் : mohana (30-Apr-12, 11:24 pm)
பார்வை : 190

மேலே