நிலா அவன் மட்டுமா ?

குளங் குளமாய்
அல்லி மலர்கள்
குதித்து ஆடி நின்றன
தம் காதலன் நிலவை வரவேற்க !

நிலவோ
மேகங்கள் சூட்டிய
மாலையோடு
மினிக்கித் திரியும்
வெள்ளிப் பெண்டுகளுடன்
வான் வீதி வழியே போயினன்
ஆடி நின்ற அல்லிகளை
சட்டை செய்யாமல்!

நிலா அவன் மட்டுமா ?

காலங் காலமாய்
உன்னை எதிர்பார்த்து
நின்ற என்னை
சட்டை செய்யாமல்
எவளுடைய மாலையோடு
என்னெதிரே
என்னைப் பார்க்காமல்
நீயும் போகிறாய் !

நிலா அவன் மட்டுமா ?

எழுதியவர் : முத்து நாடன் (1-May-12, 6:04 pm)
பார்வை : 304

மேலே