சிகரம்
மணர் கற்களால்
மணர் குன்றுகளால்
புல்வெளிகளால்
உருவாகிவிட்டேன் தானாக...!
குளிர் பனியிலும்,வெயிலிலும்
வானில் தோன்றும்
பால்வண்ணம் பொருந்திய
வடிவம் மாறாத பனிப் புகையின்
மென்மையினை கண்குளிர
காண்பவர் நெஞ்சம் மயக்கும்
எட்டாத தூரம் நாங்கள்..!!