அழகு சிற்பங்கள்

என்னை உருவாக்குபவன்
கைகள் சிவக்க

அவர்களின் ரசனையின் வலி
புரியாமல் நாடுதோறும்
நான் கடத்தப்பட

நம் நாட்டின் அழகியலாக
கலாச்சாரம், பண்பாடு
பாரம்பரியம் இங்கு
சிதையாமல் இருக்க

ஆய கலைகள் அத்தனையும்
என்னால் உருவாக்கப்பட

நான் செல்லுமிடமெல்லாம்
சிறப்போடு பாராட்டப்பட

எல்லா ஆலயங்களிலும்
நான் அழகு தேவதைபோல்
பொலிவுடன் காட்சிதந்து
வனப்பு மாறாமல் நிற்க .

அழியாமல் பாதுகாக்க....
என்னை ஏனோ ?
களவாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நானும் ஒரு சாதாரண
கற்சிலை தானே !

காலத்தினால் கரைபவர்களும்
நாங்களும் தானே !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-May-12, 6:03 pm)
பார்வை : 346

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே