கடமைவாதிகள்
அழகான இனிய பாடலைக் கேட்டு
மகிழ்வது
உற்ற நண்பர்களுடன்
ஒன்று கூடி பேசி,சிரித்துக்களிப்பது
நம் மனசுக்குப் பிடித்த
வாழ்க்கைத் துணையைத் தேடுவது
காதல் கொள்வது
மனம் விரும்பும் துணைவரை
மணம் செய்வது
இல்லற இன்பம் துய்ப்பது
நல்ல பிள்ளைகளைப பெற்றடைவது
தம் வாழ்வைப் பிள்ளைகளுக்காக
அர்ப்பணித்து விட்டுச
செல்கிறார்கள்
முதியோர் இல்லம் நோக்கி...!