வாழும் உயிர்
நன்கு பசிக்கும் போது
நோய் அண்டுவதில்லை.
அதே நேரத்தில் நம்மால்
எந்த வேலையும்
செய்யத் தோன்றாது.
பசி வந்தால் பத்தும்
பறந்து போகும்
என்பது நிஜமல்லவா..!
இதை விட கொடுமையானது
வேறு எந்த நாட்டிலும்
இல்லை.
ஞானிகளும் துறவிகளும்
எப்படித்தான்
வாழ்ந்தார்களோ..!
என்னால் ஒரு வரி கூட
எழுத முடியவில்லை.
எழுந்து நடக்கவும்
தடுமாறுகிறது.
கண்கள் தானாக
செருகிக்கொள்கிறது.
அம்மா !
சாப்பாடு போடுங்கள்
சீக்கிரம் .....!