எதிரிகள்
காலத்தின் சூழ்ச்சியால்
என்னை தவிக்க
விட்டவர்கள்
எனக்கு நண்பர்கள்....
நம்பியவர்கள் என்னை
ஏமாற்றியதும்
கோபம் கொள்ளாமல்
அவர்கள் மீது
அன்பு காட்டுகின்றேன்...
அகத்தின் அழகினை
முகத்தில் காட்டாது
கோபம் கொள்பவர்களை
நான் மன்னித்து விடுவேன்...
கூடவே இருந்து
காட்டிக் கொடுத்தவர்களை
நட்பு பாராட்டவும்
என்னால் முடியும்....
இத்தனை குணாதிசயங்கள்
உள்ள மனிதர்களை
நான் பிடித்துக் கொண்டால்
பிடித்துக் கொள்வீர்கள்
என்னை நீங்கள் ....!