யாரைப்பார்க்கச் செல்கிறீர்கள்.? பொள்ளாச்சி அபி

-தூதுக் குழுவினரே..
யாரைப் பார்க்கச் செல்கிறீர்கள்..?

அவனொரு போர்க்குற்றவாளி,

-பாதுகாப்பிற்கு துப்பாக்கி
எடுத்துக் கொள்ளவும்..!

அவனொரு மனிதமிருகம்,

-மயக்கமருந்தும் ஊசியும்
எடுத்துக் கொள்ளவும்..!

அவன்தெற்காசியாவின் ஹிட்லர்,

-தூக்குக்கயிறும் விஷமும்
எடுத்துக் கொள்ளவும்..!

அவன் சொந்த நாட்டுமக்களை
தினமும் கொல்பவன்,

-அவனைக் கொன்று
வீதியில் சடலத்தை வீசவும்..!

அவன் அண்டை நாட்டு அதிபரும் கூட..,

-அப்படியானால் விலையுயர்ந்த
பூங்கொத்துக்களை கொண்டு செல்லுங்கள்..
அண்டைநாடுகளோடு நல்லுறவுதான்
நமக்கு மிகவும் முக்கியம்.!-

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (2-May-12, 7:00 pm)
பார்வை : 243

மேலே