வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! (சுப்பிரமணிய பாரதி - Vaarthai Thavarivittaai)

.....வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!....


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!

(தீர்த்தக் கரையினிலே...)

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ?

(தீர்த்தக் கரையினிலே...)

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

(தீர்த்தக் கரையினிலே...)

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி!

தீர்த்தக் கரையினிலே...
(கண்ணம்மா - என் காதலி)
மகாகவி சுப்பிரமணிய பாரதி

English Stub:
theerththak karaiyinilae therku moolaiyil shenbagath thoattaththilae
paarththirundhaal varuvaen vennilaavilae paanigiyoadenru sonnaay
vaarththai thavarivittaai adi kannammaa maarbu thudikkudhadi
paarththa idaththilellaam unnaip poalavae paavai theriyudhadi
paavai theriyudhadi

(theerththak)

maeni kodhikkudhadi thalai sutriyae vaedhanai seygudhadi
vaanin idaththaiyellaam indha vennilaa vandhu thazhuvudhu paar
moanaththirukkudhadi indha vaiyagam moozhgith thuyilinilae
naanoruvan mattilum pirivenbadhoar naragath thuzhaluvadhoa (2)

எழுதியவர் : (5-Nov-09, 12:39 pm)
பார்வை : 2551

மேலே