பிரிந்தோமா...?

பிரிதல் எப்படிச்
சாத்தியம்?
உன்னில் இன்னும் நான் இருக்கையில்...

உதடுகள் மாறுகின்ற
உண்மையை
கண்ணாடியில் முகம் பார்த்து
கண்களிடம் கேள்.

கோபத்தில் நீ எறிந்த
வார்த்தைகளைக் கனல்துளிகளைக்
குவித்து வைத்திருக்கிறேன்
குளிர் காய்வதற்கு

நீ தந்த காயங்களை கூட
ஆறுவதற்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று

உன் நினைவுகளை
எரித்த சாம்பலிலும்
பீனிக்ஸ் பறவையாய்
நீயேதான் எழுகிறாய்

பிறகெப்படி நாம்
பிரிந்தோம் என்கிறாய்...?

எழுதியவர் : (3-Nov-09, 11:55 am)
பார்வை : 1878

மேலே