கூடு கட்டி வாழும் (150)
தாய் என்ற கோயிலிலே
தெய்வீக மணம் வீசும்
கூட்டுக் குடும்பத்திலே !
காக்கைக்கும் கூடுண்டு
அந்தக் கூட்டினில் தான் உண்டு
பாடும் குயில்களையும் சேர்த்தது
தம் கூட்டுக்குள்ளே !
இந்த கூட்டுக் குடும்பத்திலே
காக்கை-குயில்களின்
இன்னிசை கீதங்கள் நம்
காதினில் தேனாக
வீசிடும் அழகினிலே !
சொல்லவோ வார்தைகளில்லையே!
கவிதைவரிகளுமில்லையே !
இவை பேசிடும் மொழிகளை கேட்கவே
நம் மனசெல்லாம் ஆனந்தத்திலே!
இந்த பறவைக் கூட்டுக்கும்
ஒரு போதும் சண்டையில்லையே !
ஒருபோதும் ஓய்வில்லையே!
என்றென்றும் சந்தோஷமே!
தன் குஞ்சுகளுடன் சேர்ந்து
ஊட்டிவிடும் வாயினிலே
பருக்கைககள் சிதறாமல்
அதனதன் செவ்வாயினிலே!
இந்த கண்கொள்ளா காட்சி
அழகே !அழகே! என்னழகே!
இந்த குடும்பம் போல
நம் குடும்பம் என்றுதான்
கூடு கட்டி வாழும் நாளோ!
என் நாளோ !அம்மா!