வாழ்க்கை
சவுக்கடிப் பட்ட இடத்தை
நீவி விடத் தெரியா குதிரை
கண்மூடி வலியைத் தாங்கும்!
அதுவும் ஒரு சுகம் தான் என்று !
ஆனால்..
கதறிட மறுக்கும் குதிரை கல் என்று
நினைக்க வேண்டாம் !
கதறிட நகைக்கும் உலகை
அந்தக் குதிரை அறியும்!
என்னுடையதல்ல இந்த கவிதை
அயல் நாட்டுக் கவிஞரின் வரிகள்
நன்றி கவிஞரே!
... ...