[230 ] எட்டாம் அறிவோ எட்டா அறிவே..!
அறிவினுக் கில்லை ஆக்கமும் அழிவும்;
தூக்கமும் விழிப்பும்; தேக்கமும் ஓட்டமும்;
வீக்கமும் மெலிவும், ஊக்கமும் சோர்வும்
நோக்கமும் பயனும் நீக்கமும், நெருக்கமும்;
ஆவன எல்லாம் உணர்ச்சியாம் மாயையே !
அது,அறி வின்மேல் ஆடிடும் ஆட்டமே!
தூய்மையும் அழுக்கும் வாய்மையும் பொய்யும்
தாய்மையும், சேய்மையும் தருவதவ் வுணர்ச்சியே !
அறிவினை மறைக்கும் ஆடையாம் மாயையை
அகற்றிட முடிந்தோர் செகத்தினில் இல்லையே!
-௦-