தூக்கி எறிந்ததேன்?

கம்பன் பாடிய
ராமன் கூட - நீ
என்னை நேசித்த அளவு
ஜானகியை நேசித்திருக்கமாட்டான்,

தாஜ்மஹாலைக் கட்டிய
சாஜஹானும் - மும்தாஜை
உன் போல் உருகி உருகி
நேசித்திருக்கமாட்டான்,

ஆனால்,

எல்லாம் செய்தும்
தடங்கல் ஏதுமின்றியும்
நீ இன்று - என்னை
தூக்கி எறிந்ததேன்?

எழுதியவர் : agarya (8-May-12, 9:25 am)
பார்வை : 210

மேலே