வாசனை அழகி.
எப்போதும் உன்னை காதல்
செய்யும் என் கவிதை
இரவின் துவாரங்களிநூடே
யுத்தம் செய்கிறது....
நிலவை விழுங்கும்
என் பேனா,
வானைக்கிழிக்கும் என் காகிதம்,
வரி வரியாய் கீரிக்குவிக்கும்
உன் வாசனை அழகினை...
என் மௌனங்களை உடைத்தெறிந்த
உன் புன்னகை மட்டுமே
சிக்குன்டு போனது
விரல்களுக்குள்ளே....
என் ராவுகளின்
மடியெங்கும் ஊற்றிக்குவிக்கும்
உன் நினைவுகளின் தூறல்கள்...
ஒரு பார்வை பார்
உடைந்து விழுகிறேன்
உன் மடி மீது......

