கத்திரி வெயில்

உச்சி வெயில்
மண்டையை பிளந்தது
நிழலில் ஒதுங்கலாம் என்று
மரத்தை தேடினேன்

அப்பாடா.....
அகப்பட்டது ஒரு மரம
அரசமரம்
அதன் அடியில்
எனக்கு முன்னே இடம்பிடித்து
ஒய்யாரமாய் இருந்தார்
ஒத்த மரத்தடிப் பிள்ளையார்

எனக்கும் கொஞ்சம்
இடம் கொடும்ம்ம் அய்யா?

இடம் புடித்துக்கொண்டேன்
அவர் அருகில்.....

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (9-May-12, 11:38 am)
பார்வை : 274

மேலே