நானும் இப்படித்தான்..
விதை-
எச்சமாய் விழுந்து
மண்ணில் புதைகையில்
முகம் சுளிக்கிறாய் நீ.
ஒரு கை நீரும் ஊற்றாமல்
மழை பொழிகையில்
வேடிக்கை பார்க்கிறாய்.
பிறகு-
விருக்ஷமென வளர்ந்து
கனிகளைச் சொரிகையில்
மட்டும்-
மார் தட்டுகிறாய்
என்னுடையதென.