தாலிக்குப் பின் தயக்கமாகிவிடுமா வாழ்வு?...
குழந்தைகளின் கையிலிருந்து..
வடை திருடிச் செல்லும்
காகத்திற்கும்...
யாரையும் கேட்காமல்
தொட்டியில் நீர் அருந்தும்
மாட்டிற்கும்
வேலியில் எக்கி...
இல்லை தின்னும் ஆட்டிற்கும்
தாலிக்குப் பின்
தயக்கமாகிவிடுமா....
வாழ்வு?