.....மகாத்மாக்கள்....
எல்லா வாக்குறுதிகளும்
மீறப் பட்டிருக்கின்றன.
எல்லா வஞ்சகங்களும்
அவிழ்த்து விடப் பட்டிருக்கின்றன.
கால் வைக்க இடமின்றி-
எல்லாத்திசைகளிலும்
பின்னப் பட்டிருக்கிறது
துரோகத்தின் வலைகள்.
ஏழு கடல் தாண்டி-
மறைந்திருக்கும்
தெய்வத்தின் வயிற்றில்
செரித்துக் கொண்டிருக்கிறது
உலகத்தின் கருணை.
இதையும் தாண்டி-
அவ்வப்போது
எப்படியோ ஒளிர்ந்து விடுகின்றன
சில நக்ஷத்திரங்கள்.