ஏன் இந்தபிறப்பு !

இறைவா !
ஏன் இந்தபிறப்பு, எனக்கேன் இந்தபிறப்பு !
ஏன் இந்தவெறுப்பு, உனக்கேன் இந்தவெறுப்பு !

கேட்க்காதவரமாய் நீ தந்த இந்தபிறப்பு,
இனிநான் கேட்க்காதவரமாய் ஆனதன்றோ !

உன்னிலை நானறியேன்,
என்னிலை நீ.... யரிவாயோ ! இதோ அறிந்துகொள் :

அன்னைமொழி அறியும்முன்னே
அன்னம்தேடும் வழியாய் அமைந்ததுஎன்னழுகை !
அன்னை பெயர் வைக்குமுன்னே
அனைவரும் பெயர்வைத்தனர் பிச்சைகுழந்தை யென்று !

வயிற்றில்...
சுமைஎன்றபோதும் சுகமாக சுமந்தால் என்அன்னை,
முதுகில் ...
சுமைஎன்றபோதும் சுகமாக சுமக்கின்றாள் அவள்என்னை !

தாய்ப்பாலுக்காக
தண்ணீரை தினம்குடிக்கிறாள் என்அன்னை ,
அவளின் நிலைகண்டு...
தண்ணீரையே தாய்ப்பாலாய் குடிக்கின்றேன் நானின்று !

கைபிடித்து நடைபழக்க
நா னென்று யாருமில்லை
அதனால், நானே நடந்தேன்
நாலுமுறை விழுந்தபின், மண்டியிட்டு எழுந்தபின் !

பசி வந்தபோது உணவென்று கேட்டேன் கடைக்காரனிடம்,
அவனோ, மனம் என்பதை மறந்து
பணம் என்று கேட்க்கின்றான் என்னிடத்தில்,
அவன் முன்னிர்ப்பது செய் என்பதை மறந்தது
நாயென்று எனைஎன்னி எப்போதும் விரட்டுகிறான் !

பிஞ்சுகைதான்
இருந்தாலும் ஏந்துகிறேன் பிச்சைக்காக !
எப்போதும் ஏங்குகிறேன் பசிக்காக,
வயிற்று பசிக்காக!

நாடென்றும் வீடென்றும் எனக்கில்லை
நாடோடியாய் வாழ்வதாலா ?
ஊரென்றும் உறவென்றும் ஏதுமில்லை
ஊர்தோரும் அலைவதாலா ?
மழைகண்டோ வெயில்கண்டோ ஒடியோதுங்க தேவையில்லை
நாளும் உறங்குவதே அவைகளோடுத்தான் என்பதாலா ?
துணி அழுக்கேன்றோ,
அழகாய் இல்லையென்றோ நானழ தேவையில்லை
நீதந்த மேனியே
அழுக்கை இருப்பதாலா ?

என்ன வரம் பெற்றேன் இதற்காக...
என்ன வரம் பெற்றேன் இதற்காக...
எல்லோருக்கும் அது பச்சைஇலை
அவர் கைவைக்கும்முன் !
எனக்கோ, அது எச்சில்இலை
நான் கைவைக்கும்முன் !
எல்லோருக்கும் ஓர் அன்னை
அம்மா... என்றழைக்க !
எனக்கோ, ஊர்தோரும் அன்னை
அம்மா... தாயே... என்றழைக்க !

இறைவா !
இன்றிறப்பேனா...
நாளை இருப்பேனா... நானறியேன் !
என்றாலும், ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் உயிர்வாழ
ஓயாமல் ஆடிக்கொண்டுதான் இருக்கிறேன் நான்வாழ !

எனக்கோ...
கையேந்த கற்றுத்தந்தவள்
களவாட கற்றுத்தரவில்லை,
பிச்சைஎடுக்க கற்றுத்தந்தவள்
பிடுங்கிதிங்க கற்றுத்தரவில்லை,
எச்சில்சோற்றை உணவென்று காட்டியவள்
ஏமாற்றினால் உலகம்உனக்கேன்பதை காட்டவில்லை !

நானும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன் - அன்னையிடம் கற்க்காதவற்றை சுற்றியிருக்கும் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு தான்இருக்கின்றேன்!

பசியென்று கத்தினால் வராத சோறு
பாய்ந்து குத்தினால் வருமென்பதை !
கையேந்தி கிடைக்காத பொருள்
களவாடினால் கிடைக்கும் என்பதை !
நடுங்கிக்கொண்டு கேட்டால்
நாயாகத்தான் பார்ப்பான்
நாக்கை கடித்துக்கொண்டு கேட்டால்
நகையைக்கூட கொடுப்பான் !
வேலைவேண்டி வீட்டோரம் நின்றால்
வேடிக்கைதான் பார்ப்பான்
வெட்டுவதை வேலையாககொண்டால்
எதையும் எனக்காக கொடுப்பான் என்று !

பசியோடு பிறந்துவிட்டேன்
பசியோடு கிடந்தும்விட்டேன்
பசியோடு வளர்ந்துகொண்டும் இருக்கிறேன்...
பசியால் பாதைமாறி பாவியாகும்முன்
என்னிலை நீ மாற்று
இல்லையேல்,
பசியால் பரிதவிக்க வைக்கும்
பாரிலுள்ள மனிதர்கள் மனதையாவதுமாற்று !

எழுதியவர் : சிவசங்கர் (9-May-12, 10:00 pm)
பார்வை : 330

மேலே