மரணம் பேசும்

மரணம் ,
இறுதியாக மண்டியிட்டாக வேண்டிய
ஒரே இடம் !

தலைவன் ,தொண்டன் ,
ஆண்டான் ,அடிமை ,
எல்லாம்
இறுதியாய் ஒரே இடத்தில் !

உண்மையை உணர்த்தும் நேரம் ,
சாதித்தது அதிகம் ,
சம்பாதித்தது அதைவிட அதிகம் ,
கொண்டு வந்ததும் ஒன்றும் இல்லை ,
கொண்டு செல்ல ஒன்றும் இல்லை !

மனித வாழ்வின்
இறுதி தணிக்கை நேரம் ,
கூட்டல் கழித்தல்களில் ,
ஏற்றமும் இரக்கமும் ,
பாவ , புண்ணியங்களில் !

இருந்தவன் வாழ்வை
இறந்த பின் மதிப்புபோடும் ,
உற்றார் ஊரார் !

பெற்றவன் வைத்தது ,
படித்து வாங்கியது ,
பட்டம் பெற்றது ,
எல்லாம் பொய்
இறுதியாய் புது பெயர்
"பிணம் "!

நடிப்பு உலகத்தைவிட்டு ,
உணமையான உலகத்திற்கு
ஒரு புது பயணம் !

வேண்டாவிட்டாலும்
உனக்கும் இறுதி ஊர்வலம் ,
வாழ்க்கை பரிட்சையில்
நீ பெற்ற மதிப்பெண் ,
பாடையின் பலத்தில் ,
பார்ப்பவன் கண்களில் !

சேர்த்துவைத்த பணத்தில் ,
சில்லறையை மட்டும்
நெற்றியில் இட்டுவிட்டு ,
மீதியை கணக்கு பார்க்கும்
சில்லறை வாரிசு !

நடித்தவர்கள் எல்லாம்
உண்மை பேசும் காலம் ,
கேட்கமுடியாத உயரத்தில் ,
பார்த்தும் பார்காததாய் ,
புகைப்படத்தில் !

நீ சாதித்தவைகளில்
இறுதியாய் ஒரு பட்டியல்
" கல்லறை கல்வெட்டில் "!

எழுதியவர் : வினாயகமுருகன் (9-May-12, 10:30 pm)
பார்வை : 278

மேலே