232 - புதியதோர் (போ)பாதை செய்வோம் ..! எச்சரிக்கைக் கட்டுரை !
[இது முக நூலிலிருந்து எடுக்கப்பட்டு சமுதாய நலனில் அக்கறைகொண்ட எழுத்துத் தளக் கவிஞர் களின் பார்வைக்காக இடப்பட்டுள்ளது]
அன்றாடம் அலுவலகங்களில்,அவ்வப்போது வீடுகளில் பயன்படும் பொருளை இளைஞர்கள், பள்ளிக்கூடச் சிறுவர்கள் போதைக்காக எடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
இந்த பகீர் தகவலின் பின்னணியில் இருக்கும் அந்தப் பொருள்... ‘ஒயிட்னர்’. எழுத்துக்களில் தவறு இருந்தால், அவற்றை அழிக்கப் பயன்படுவதுதான் இந்த ‘ஒயிட்னர்.’...
‘‘பொதுவாக பதின்மூன்று வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பருவத்தினர் நண்பர்கள் மூலம் இதனைத் தெரிந்துகொள்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு போதை உணர்வு பற்றியெல்லாம் தெரியாது. மாறாக, மூக்கருகே வைத்து முகரும்போது,ஒருவித மயக்கம் வருவது போல் தோன்றும். அவ்வளவுதான்.
வத்திராயிருப்பில் பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் நூதன போதை கலாசாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குக்கிராமங்களிலும் டாஸ்மாக் ஒயின்ஷாப்கள் திறக்கப்பட்டதால், பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பள்ளி மாணவர்களை கூட இப்பழக்கம் தொற்றி உள்ளது. இது மட்டுமன்றி "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் ஒரு நூதன போதை கலாசாரமும் தற்போது பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதன் பழக்கத்தில் வத்திராயிருப்பு பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பைல், பேப்பர்களில் எழுதும்போது, தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்பட்டால் ,அதை "ஒய்ட்னர்' எனப்படும் ரசாயனக்கலவையிலான மையைக்கொண்டு அழித்து எழுதுவர். இது அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது. இதில் இருபாட்டில்கள் உள்ளன.
ஒருபாட்டிலில் வெள்ளைநிற பசை, மற்றொரு பாட்டிலில் ஆல்கஹால் கலந்த "ஸ்பிரிட்' உள்ளன. இதை வாங்கும் மாணவர்கள், தண்ணீர் பாக்கெட் வாங்கி அதன் நீரை வெளியேற்றி, ,காலி பாக்கெட்டில் ஒய்ட்னர் கலவைகளை ஊற்றுகின்றனர். அதை மூடி கையால் வேகமாக தேய்க்கின்றனர். இதில் பாலிதீன் பை உப்பி பெரிதாகுகிறது. பின்னர் பாக்கெட்டை திறந்து அதில் உருவாகும் ரசாயன வாயுவை ,மூக்கு மற்றும் வாய்க்கு நேராக வைத்து வேகமாக உறிஞ்சுகின்றனர். ஒருசில விநாடிகளிலே போதை தலைக்கு ஏற, மயங்கி சாய்கின்றனர். பின்னர் சகமாணவர்கள் எடுத்து, அதேபோல தேய்த்து உறிஞ்சுகின்றனர். ஒரு ஒய்ட்னரை நான்கைந்து பேர் வரை பயன்படுத்துகின்றனர். குறைந்த செலவில் கிடைப்பதாலும், கடைகளில் சிரமமின்றி வாங்க முடிவதாலும், இதையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பல பகுதி மாணவர்களிடையே இது வேகமாக பரவுகிறது.
கடந்த இரு வாரம் முன் வத்திராயிருப்பில் ஒரே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 பேர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்த மாதரசியம்மன் கோயில் வளாகத்தில் ,இந்த நூதன போதை பழக்கத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அப்பகுதி சென்று பிடித்தனர். அதில் 7 பேர் போதையில் மயங்கி கிடந்தனர். மற்ற மூவர் தப்பினர். பிடிபட்டவர்களை போலீசார் விசாரித்ததில் அனைவரும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மாட்டிய அவர்கள் போதை தெளிந்து, போலீசார் காலில் விழுந்து கதற, கடும் எச்சரிக்கைக்கு பின் விடுவித்தனர். இச் சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன் கூறுகையில்,"" போதையில் சிக்கியமாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாலும், அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்க்காக எச்சரித்து அனுப்பப்பட்டனர். கடைகளில் "ஒய்ட்னர்' கேட்டு மாணவர்கள் வந்தால் வழங்கக்கூடாது என அனைத்து கடைக்காரர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்,''என்றார்.
நகங்களில் போடும் ‘பாலிஷ்’ கெட்டியாக ஒட்டிக் கொண்டால், அதன்மீது ‘ஒயிட்னர்’ வைத்தால் போதும். ஒரு சில நொடிகளில் ‘பாலிஷ்’ காணாமல் போய், நகங்கள் பளப ளக்கும். இதற்கு ‘ஒயிட்னரி’ல் இருக்கும் ‘டொலீன்’ என்கிற ரசாயனம்தான் காரணம். அதோடு ‘டிரை குளோரோ எதிலீன், ‘புரோமோ புரோபேன்,’’ ‘மெதில் பென்ஸீன்’ என் கிற சேர்மங்களும் சேர்ந்துகொள்வதால், ‘ஒயிட்னர்’ கொடிய விஷமாக மாறுகிறது. மூக்கருகே கொண்டு செல்லும்போது மயக்கம், போதை வருவதற்கும் இதுதான் அடிப்படை. அந்த மயக்கம் சில மணிநேரம் வரை நீடிக்கும் ஆபத்து உண்டு!’’ என்று சொல்லும் அந்த சமூக ஆர்வலர், அதனால் பள்ளிச் சிறுவர்களை பெற்றோர் கண் காணிப்பது அவசியம்குறைந்த விலை,எளிதில் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால், பயன்படுத்துபவர்கள் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வராது. அன்றாடம் வீட்டுப் பாடங்கள் எழுதும்போது தவறுகள் வந்தால் எளிதில் அழிப்பதற்குத் தேவை. அதனால் ‘ஒயிட்னரை’ தவிர்க்கவும் முடியாது.
‘‘சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் இளைஞர்களிடம் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருவது உண்மை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு முறை ‘ஒயிட்னரை’ முகரும் எண்ணம் வரும். தொடர்ந்தால் போச்சு. அடிமையாகிடுவாங்க. சிலர் பெட்ரோல், காபித்தூள், தேயிலை மாதிரி பொருட்களை முகர்வது உண்டு. அதனால் வரும் பாதிப்புகள் குறைவு. ஆனால் ‘ஒயிட்னர்’ அப்படி அல்ல. முகரும்போது நேராக மூளை செல்களைத்தாக்கும். அதனால் போதை ஏற்படும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலரும் என்னிடம் சிகிச்சைக்காக வருவது உண்டு!’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல மனநல மருத்துவ நிபுணர் லட்சுமி விஜயகுமார்.
சரி. ஒயிட்னர் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் வரும்? பொது மருத்துவர் செல்வராஜனிடம் கேட்டோம்.
‘‘ஒயிட்னரில் ‘ஆல்கஹால்’ உண்டு. போதை ஏற்பட அதுதான் காரணம். மூச்சுத் திணறல் முதல் மூளை செயலிழப்பு வரை பாதிப்புகள் வரும் ஆபத்து உண்டு!’’ என்கிறார்.
சிறுவர்களிடம் ஒயிட்னர் பயன்படுத்தும் பழக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?என்பது குறித்து பிரபல குழந்தை மருத்துவர் பிரேம் சேகரிடம் கேட்டோம். ‘‘நீண்டநாட்கள் பயன்படுத்தினால் நரம்புமண்டலம் பாதிக்கும். உறுப்புகள் செயலிழக்கும்!’’ என்கிறார் எச்சரிக்கை கலந்த குரலில்!.
பாதிப்புகள் என்னென்ன?
நுரையீரல் அழற்சி, ஞாபகசக்தி குறையும்,, பேசுவதில் சிரமம்.முகர்ந்தால் ஆபத்து,ஒருமுறை ‘ஒயிட்னரை’ முகர்ந்தால் சுமார் நான்கு முதல் பத்து மணி நேரம் வரை போதை இருக்குமாம். பைக்குள் வைத்து எளிதில் மறைத்து எடுத்துச் செல்ல முடியும் என்பதால், பெற்றோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம் - Thanks : Kumudham.
எனவே வீட்டில் இருக்கும் பெற்றோர் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை எப்போதும் கண்கானைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.கஷ்டப்பட்டு பிள்ளைபெறுவதைவிட இன்றுபிள்ளைகள் வளர்ப்பு மிகப்பெரிய சுமையாகத்தான் தோன்றும். ஆனால் இதைப் பார்த்தால் நம் குடும்பம வீனாகித்தான் போகும். எனவே பேறுகாலத்தில் பெரும் கஷ்டத்தை கொஞ்சம் நினைத்தால் இது ஒரு பெரிய விசயமில்லைங்க.
உங்கள் கருத்துக்களை பதியலாமே.
அன்புடன்
சீர்காழி அஜிஸ்.