புதிதல்ல....புதிரல்ல!
நான் கிறுக்கிய வார்த்தைகளை
நீ கவிதை என்றதும்.
உன் தலையேறி உதிர்ந்த
பூக்களை
நான் முத்துக்களுக்கு
உவமையாக்கியதும்,
உனக்கும் எனக்கும்
அன்று புதிதல்ல...
என் பேனாவுக்கும்
நான் வாங்கும்
வெற்றுத் தாட்களுக்கும்
உன்னைப் பற்றி ஓராயிரம்
கவிதைகள் செய்ததும்
அன்று நமக்குப் புதிரல்ல.
தென்றல் தீண்டி
தெருவில் கடப்பது
நீயாயினும்
உன் மறுத்தலுக்குப் பிறகும்
உன்னை வர்ணிப்பதை
நிறுத்தாமலிருக்கும்
என் பேனா என்றும் எனக்கு
புதிராய் இருக்கிறது!