!!!சோகமே சுகம்(பிரியாராம் ) !!!
களிப்பு சில நொடியில் மனம்
கலங்க வைக்கும் அத்தருணத்தில்
எளிதில் எடுக்கும் தவறான முடிவே
சந்தோஷ சங்கடத்தின் உச்சம்
துன்பத்தின் எச்சம் ...
சோகம் முப்பொழுதும் சுகம்தரும்
சோகத்தில் மனம் இன்பமுறும்
கண்கள் கண்ணீரை வரவைக்கும்
சோகத்தின் முடிவு முக்காலத்தும்
தெளிவே! ஆம் தெளிவே ..
அந்த நிசப்த தருணத்தின்
எண்ணம் என்றென்றும் தெளிந்த
ஆற்றோடை நீர் போன்றது...
சோகம் சுமையல்ல, சுகமே
அந்த தருணத்தை அனுபவித்தால்
நம் வாழ்க்கை பயணம் ஆனந்தமே .......