என் நான் நீ!

என்ன அருகதை இருக்கிறது
எனக்கு
உன்னை புகழ்ந்து பாட?

நீ செய்து காட்டிய ஒன்றைக்கூட
என்னால் செய்ய முடியவில்லையே....

அம்மா!அம்மா!அம்மா!

எங்கள் வீட்டில் அனுதினமும்
ஓயாமல் ஒலித்த
தேசிய கீதம்!


உன் முந்தானையில்
ஒளிந்து விளையாடி,
உன் மடியை
தலையணை ஆக்கி,
உன் செல்லக்கோபங்களில்
தந்தையின் அடிக்களுக்குத் தப்பி,

என
எங்களுக்கு எல்லாமுமாய் இருந்தாய்.....

உன்னிடம் ஆயிரம் கேள்விகள்
கேட்ட நங்கள்
தந்தையிடம் கேட்கும் ஒரே கேள்வி....

"அம்மா எங்க இருக்காங்க?"


ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும்
சுவர் கடிகாரம்
உன்னை மட்டுமே நின்னைவூட்ட....

எங்கே இருக்க அம்மா?
கடவுள் என்ற அயோகியன்
என் கையில் கிடத்தில்
கேட்பேன்....

நங்கள் செய்த குத்தம் என்ன?
மரத்தின் கிளைகளை
விட்டுவிட்டு ஏன் வேரை
அறுத்தாய் என்று?

ஆணிவேர் நீ!
அனைத்தும் நீ!
ஆதியும் நீ!
அந்தமும் நீ!
கள்ளக்கொபம் நீ!
அன்பின் கருணை நீ!
சத்தியம் நீ!

என் நான் நீ!
உன்னால் தான் இன்று
இந்த நான்
இறுமாப்புடன்!

அம்மா!
என்ன அருகதை இருக்கிறது - எனக்கு
உன்னை பாட!

எழுதியவர் : சரவணா (14-May-12, 1:24 pm)
பார்வை : 326

மேலே