v for vendetta- ஒரு விமர்சனம்

மனிதன் மறக்கப்படலாம் ஆனால் அவனது யோசனைகள் மறக்கப்படுவதில்லை. இதனை கருவாய் கொண்டு இயக்கப்பட்ட ஒரு படம். 400 வருடங்களுக்கு முன்னால் ஒருவனுக்கு தோன்றிய யோசனை சரியாக திட்டமிடப்படாததால் தோல்வியை தழுவியது. அதனை நம் கதாநாயகன் எவ்வாறு திறம்பட செயல்படுத்துகிறார் என்பது தன் திரைக்கதை.
ஊரடங்குச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஒரு நகரத்தில் காவலர்களிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணைக் காப்பற்றுபாவனாக நாயகன் அறிமுகமாகிறான். முகமூடி அணிந்த நாயகம் படத்தின் இறுதி வரை முகமூடியை விளக்கவில்லை. முகமூடி முகத்திற்கு மட்டுமே தவிர அவனது எண்ணங்களுக்கோ, செயல்களுக்கோ அல்ல. அவனது முதல் அறிமுகமே அவனை ஒரு தீவிரவாதியாய் சித்தரிக்கின்றது.
அதன்பின் அந்நகரத்தின் தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்றி அதன்மூலம் தன் திட்டத்தை ஊருக்கு அறிவிக்கிறான்.
நவம்பர் 5 என்ற நாளையொட்டி கதை நகர்கிறது. அன்றைய நாள் நாட்டின் சட்டமன்றம் தகர்க்கப்படும் என்ற செய்தியை அறிவிக்கிறான்.
பின், அவனது பழித் தீர்க்கும் படலம் ஆரம்பிக்கின்றது. நாட்டின் முன்னணி தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். அதன் பின்னணியை ஆராயும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. அதிகாரத்தை கொண்டு மக்களை அரசாங்கமே கொன்ற கொடூரம்.
முதலில், கதாநாயகனை துரத்தி பிடிக்க ஆர்வம் காட்டிய போலீஸ் அதிகாரி இறுதியில் அவனது செயலில் வெற்றி காண உதவுவதும், மக்கள் அனைவரும் அவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் மக்களின் ஏக்கத்தை உணர்த்துகிறது.
கட்டடங்களில் ஒன்றும் இல்லை அவற்றைத் தாண்டி நம்பிக்கை தான் மக்களுக்கு தேவை என்ற நாயகனின் வார்த்தைகள் உலகின் நிஜத்தை உணர்த்துகிறது. இப்படத்தின் நாயகன் வேறு யாரும் இல்லை, நாம் தான் நம்மில் ஒருவர் தான்! நம் உரிமைகளுக்கு நாம் தான் போராட வேண்டும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு "V" இருக்கிறான் அவனை நாம் தான் இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
உலக மக்கள் சுதந்திர சுவாசத்தை நுகர செயல்படுவோம். ஒருங்கிணைந்து செயல்படுவோம்!! நவம்பர் 5 நம் வாழ்வின் மறக்க முடியாத நாளாகட்டும்!!
ஒன்றை மட்டும் நினைவில் கொள்வோம்!!
அரசாங்கத்தை கண்டு குடிமகன் பயப்படக்கூடாது,
குடிமகனை கண்டுதான் அரசாங்கம் பயப்பட வேண்டும்!!

எழுதியவர் : kuchimittai (15-May-12, 5:00 pm)
பார்வை : 642

சிறந்த கட்டுரைகள்

மேலே