கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் 1 விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கவிதைக்கூத்து

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு விழா மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். விழாவில் தமிழ்த்தேனீ இரா .மோகன் .மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும் .நூல் ஆசிரியரின் அண்ணி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .

தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
தன்னலம் கருதாத் தந்தையவர்
மின்னலை முந்தும் வேகமவர்
முன்னிலை விரும்பா மனிதரவர்
என் நிலை உயர்த்திய ஏந்தலவர்.

இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அணிந்துரையும் ,கலை மாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை .சொற்களின் சிற்பம் கவிதை .சிந்தையை செதுக்குவது கவிதை .இப்படி கவிதைக்கு இலக்கணம் எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி தான் ஒரு மத போதகர் என்பதையும் மறந்து கவிஞராக மாறி உண்மையை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதைக்கூத்து !

அடிமைத்தனத்திற்கு
முடிவை அது காட்டும்
அறிவுள்ள மனிதனாக
அனைவரையும் தீட்டும் .
பேனா கூர்மையில்
பிரளயம் பிறப்பெடுக்கும்
கவிதைக்குப் பின்னாலே
உலகமே காலெடுக்கும்.
கவிதை குறித்த விளக்கம் மிக நன்று .

சாதி என்ன நிறம் !
இரத்தத்தில் மட்டும் எழுதாதே
வாசிப்பதற்கு யாரும்
உயிரோடு இருக்க மாட்டார்கள் .

சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையைச் சாடும் வண்ணம் கவிதை வடித்துள்ளார் .மனித நேயம் விதைக்கும் விதமாக எழுதி உள்ளார் .
தலைப்பில்லாத் தலையங்கம் என்று தலைப்பிட்டு சிறு கவிதைகள் எழுதி உள்ளார் .இந்தக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் எழுத முயன்று உள்ளார் .

தாழ்மை
வேண்டுமென்று
ஜெபம் செய்தேன்
அடிமையாக்கி விட்டார்கள் .
இந்த வரிகளின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவை நினைவூட்டுகின்றார் .

வாதம் செய்வதற்கு
அஞ்சாதீர்கள்
வாழ்க்கை
அங்குதான் இருக்கிறது .
பேச்சுரிமைக்கு வலு சேர்க்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

என் ஜீவனுக்குள்
ஜீவன்
"கவிதை "
கவிதை எமக்கு உயிர் என்கிறார் .

அன்று இன்றும் கவிதையில் தேவாலயத்தில் நடக்கும் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகின்றார் .நெஞ்சு உரத்துடன் ,நேர்மைத் திறத்துடன் கவிதை எழுதி உள்ளார் .

பதச் சோறாக ஒன்று உங்கள் பார்வைக்கு .

இன்று
நம்பிக்கையோடு வா
ஊருக்கு ஓரு சிலுவை உனக்காகக்
காத்திருக்கிறது .மரம் வாங்கியதிலும்
ஆசாரிக் கூலி அனைத்திலும் கமிசன் .

செல் பற்றி எழுதி உள்ள கவிதை மிக நன்று .நூலில் பல்வேறு கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளது .

எய்ட்ஸ்
உணர்ச்சியைப் பங்கிடு
ஒன்றும் தவறில்லை
உன்னவளோடு மட்டும் .

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தும் விதமாக உள்ளது கவிதை .

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ,ஜோதிடத்தை சாடும் விதமாக ,பகுத்தறிவு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .,
கைரேகை !
கைக்குள் இருக்கும்
கைரேகையில் இல்லை வாழ்க்கை
உழைப்பே உயர்வுக்கு முகவரி
குரு மேடு என்று குழம்பிக் கொள்ளாதே
சனி என்று சளைத்துக் கொல்லாதே
செவ்வாய் தோசத்தில்சிக்கிக் கொண்டதாக
சிறுமைப் படதே
உன் கையே உனக்கு எதிரியாகுமா !

சோதிடத்தை நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் மனிதர்களுக்குப் புத்திப் புகட்டும் விதமாக உள்ளது கவிதை
இது ஒன்பதாவது நூல் .இனி தொடர்ந்து நூல் எழுதிட வாழ்த்துக்கள் .

எழுதியவர் : இரா .இரவி (14-May-12, 11:18 pm)
பார்வை : 294

சிறந்த கட்டுரைகள்

மேலே