பார்வை !!!
உன் விழிகள்,
கற்பனைகளின் கலைக்கூடம்,
கனவுகளின் கருவறை,
காட்சிகளின் பிறப்பிடம்,
உணர்வுகளின் வெளிப்பாடு,
காதலின் வரவேற்ப்பறை!!!
அன்று நீ பார்த்த ஒற்றை பார்வையில்
ஆயிரம் அர்த்தம் கண்டேன் நான் !
உன் குறும்புப் பார்வை காண வேண்டி
கிழக்கு நோக்கி தவமிருந்தேன் !!!
உன் விழிகளின் வலையிலிருந்து தப்பிச் செல்ல
வேறு திசை நோக்கிய போதும்
உன் காந்தப் பார்வை
என்னை ஈர்த்தது உன் வசம் !!!
நீ கோபப்பார்வை வீசியதற்கு
ஓராயிரமாண்டு உன்னை என் நெஞ்சில் தாங்கினேன் !
உன் குறும்புப் பார்வை காண வேண்டி
கிழக்கு நோக்கி தவமிருந்தேன் !!!
உன் காதல் பார்வை தேடி
காலமெல்லாம் காத்திருந்தேன் !
உன் காமப் பார்வை என்னை சுண்டியிழுக்க
உன்னைச் சுற்றி சுற்றி வந்தேன் !!!
பெண்ணே !!!
பலபேர் சூழ்ந்துள்ள சபையிலும்
பார்வையற்று நிற்கிறேன்
உன் ஒற்றை விழி பார்வைக்காக !!!
கருணை பார்வையேனும் பார்த்து செல்லடி!!!!

