நீ மட்டும் ஏன்?
நீ மட்டும் ஏன்?
மண்ணில் புதைந்த
விதை கூட
நிலத்தை முட்டி முட்டி முளைக்கிறது....
சிப்பிக்குள் விழுந்த
தூசி கூட
முத்தாய் ஜொலி ஜொலிக்கிறது!
அழுத்தத்திற்கு அஞ்சினால்
மரக்கட்டை
வைரம் ஆவது எப்போது?
மாற்றத்துக்கு பயந்தால்
நீர் மேகமாகி
ஆகாயம் செல்வது எப்போது?
வீழ்வோமென நினைத்தால்
மேகம் மழையாகி நிலம்
சேர்வது எப்போது?
தோல்விகளில் துவளாதே
நம் முன்னோர்களின்
தோல்வியே
இன்று அனுபவமாய்
மூளையில்
"மரபுக்கடத்தல்" என்பார்கள் அறிவியலில்!
விதியைப் பழிக்கிறாய்!
ஈசலுக்கு விதிக்கப்பட்டது
ஒரு நாள் வாழ்கை
தான்...
இனியேனும்
வீணில் பொழுதை கழிக்காமல்
உன்னை நீ தோண்டி எடு!
தங்கமோ நிலக்கரியோ!
அது உன் உழைப்பைப் பொருத்தது....
விதையில் எப்படி விருட்சம்
ஒளிந்துளதோ!
மேகங்களில் எப்படி மின்னல்
ஒளிந்துளதோ!
அதுபோல்
உன்னுள் ஒளிந்துள்ளது
நாளைய உலகின்
எதிர்காலம்...