கட்டில் பீரோ!

பெண் வீட்டிலிருந்து
படியிறங்கி வந்த
அந்த நொடியை
திரும்பப் பெற்றால்
கண்டிப்பாக
கால் முளைத்து
உள்ளே ஓடக்கூடும்
என்றே அவைகளுக்கு
தோன்றுகிறது இன்று!

புகுந்த வீடு
புகுந்த நாள்முதலாய்
புது அறையோடும்
புது வாசத்தோடும்
புது உறவுகளோடும்
புழுங்கித் தவிக்கின்றன
கட்டிலும் பீரோவும்
சீதனமாய் வந்த
இன்ன பிற பொருட்களும்
புதுப் பெண்ணுடன் சேர்ந்து...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (16-May-12, 12:35 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 243

மேலே