சில்வாணியா என் மனைவி! (மனைவி -2)

சில்வாணியா என் மனைவி!

மாவடு கண்ணைப் பார்த்து - அவள்
மருளும் அழகைக் கோர்த்து
காதலை நடையிலே சேர்த்து - அவள்
காலையில் நட்ட நாத்து!

பசியென்று வந்து நின்றால் - அவள்
பரிமாறும் அழகில் செந்தாள்
அமுதமுகம் கண்டு விட்டால் - அவள்
அல்லிக்கு அடுத்த வீட்டால்!

சினத்துக்கு அனைக்கட்டி வந்தால் - அவள்
சிங்கரா தமிழைத் தந்தாள்
அழியும் கவலை எல்லாம் - அவள்
பொழியும் சிரிப்பை கண்டால் !

குண்டாய் அமைந்த தேகம் - அவள்
குறுக்கீடு இல்ல ராகம்
கொஞ்சும் அழகில் மோகம் - அவள்
கொலுவில் வீற்றிருக்கும் மேகம்!

சித்திரை மாத கனவு - அவள்
சிரிக்கும் சிரிப்பே உணவு
சிரத்தை எடுக்கும் சினவு - அவள்
சிந்தையில் என்றும் தெளிவு!

அரபிக்கடல் தாண்டி வந்தபோதும் - அவள்
அழகு என்னுள் நின்றுபாடும்
"அம்மு" என்றழைத்தால் போதும்
ஆயிரம் முத்தங்கள் சேரும்!

அன்பனே! என்றருகில் வருவாள்!
அத்தான்! என்றே மொழிவாள்!
அகமும் புறமும் நிறைவாள்!
அவளே எந்தன் மனையாள்!


என்றும் தமிழ்புடன் .......
செந்தூர்.சில்வாணி ஸ்நேஹன்
அல்க்ஹர்ஜ் - ரியாத் - கிங் கஹ்லிட் ஹோச்பிடல்
சவுதி அரேபியா.

எழுதியவர் : செந்தூர்.சில்வாணி ஸ்நேஹன (17-May-12, 11:07 pm)
சேர்த்தது : chendur.sylvanisnehan
பார்வை : 196

மேலே