ஒரு பதில் சொல்

''ஒரு பதில் சொல்''
என் பேரை உன் நண்பன் எனும்
இதயத்தில் ஏற்றிவிட்டாயே
என் நண்பனே !

என் ரசனையையும் என் எண்ண அழகையும்
உன் வாழ்வில் காட்டிவிட்டாயே
என் நண்பனே !

நான் உனக்கு என்ன செய்வேன்
கைம்மாறு?

நான் உன் ஜென்மத்தின் காவலா?
போன பிறவியின் காதலியா?தோழியா?
யாரென்று நீ உரைப்பாய்?

யாழிசைக்க வேண்டுமென்றால்
ராகமில்லை என்னிடம்

யாருமின்றி தவித்திருக்கும்
காவலின்றி தவித்திருக்கும்
என் இதயம் ...

உன் மனதினில் பேசிட
எண்ணிக் கொண்டு நாள் முழுதும்!

என்னிடம்
ஒரு பதில் சொல்
உன் வார்த்தைகளை ரசித்திட
காத்திருக்கும்
உன் விழி வழிகளை எதிர்பார்த்து...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-May-12, 8:22 am)
Tanglish : oru pathil soll
பார்வை : 534

மேலே