சுமை

பாடம் படிக்கும் பிள்ளை
பாரம் சுமக்கலாகாது
என்று எனை
வித்தகனாக்கும் ஆசையில்
என் புத்தகப் பையையும்
நீயே சுமந்தாய்,
என் பள்ளிக்கூடப்
பயனமனைத்திலும்!
கருப்பையில்
எனைச் சுமந்ததற்கே
கடன்பட்டு நானிருக்க
என் கல்விப்பையையும்
சுமந்த உனக்கு
கைமாறு நான்
என்ன செய்ய?

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (22-May-12, 2:10 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : sumai
பார்வை : 250

மேலே