வாழ்வின் முடிவு..?

கொடிகளுள் ஒன்றாய் பிறக்கிறோம்
கொட்டி கொட்டி படிக்கிறோம்
சுற்றி சுற்றி அலைகிறோம்
தேடி தேடி வேலை பெறுகிறோம்
ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்
முட்டி முட்டி பொருள் தேடுகிறோம்
மொத்தமாய் எல்லாம் இழந்தே
ஒர் நாள் போகிறோம் மண்ணுக்குள்...
எது சுகம் எது சோகம்
எது நன்மை எது தீமை
எது சரி எது தவறு
எது குப்பை எது கோபுரம்
சரியாய் அதனை உணர்ந்தால்
உணர்ந்தோர் சிலர் உணர்வித்தால்
மனிதம் மலராதோ மண்ணில்
மனித வாழ்வும் சிறக்காதோ புவியில்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (27-May-12, 3:22 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 568

மேலே