மௌனக்கதறல்கள்...!

எனது கவிதைகள் ....!
சிதைந்த இதயத்தில் ...
இயற்கை வடித்த வாழ்க்கை செதுக்கல்கள்..!
விரக்தி தீயில் பற்றி எரியும்....
உறைந்த ரத்த விளக்குகள் ...!
அலைமோதும் கடல் அலையில் ...
அறையப்பட்ட இரைச்சல்கள் ...!
தூக்கத்தை தொலைத்த...ஏக்கத்தின் .
துக்க புலம்பல்கள் ...!
மணத்தை இழந்த மலர்களின் ...
மரண வாக்குமூலங்கள் ...!
கவலையில் மூழ்கடிக்கப்பட்ட..கனவுகளின்
கண்ணீர் கதைகள் ...!
மொழிகளை மறந்த ..நினைவுகளின்
மௌனக்கதறல்கள் ...!
நிம்மதியை தேடும் ஆத்மாவின்...
அனாதை முகவரிகள்..!
விழியை தேடும் ..கண்ணீரின்
கானல் கல்வெட்டுக்கள் ...!
உயிர்ப்பை தொலைத்த சிற்பத்தின்....
சிதறிப்போன சில்லுகள் ...!
நெருப்பில் பொசுங்கிய சித்தரத்தின் ...
சாம்பல் கசடுகள்...!
உணர்வுகளை கொன்ற உண்மையின் ...
உருவமில்லா நினைவுகள் ...!
எதார்தத்தை கொட்டிக்கவிழ்த்த .....
வாலிபத்தின் வறட்டு பிடிவாதங்கள் ...!
மொத்தத்தில் ..எனது கவிதைகள் ..
வாழ்க்கைபோர்வையில் முகம் புதைத்த
சோகக்கிழிசல்கள்...!