வேண்டாமே தீவிரவாதம்

நீ நான் என்று
சுயநலம் கொண்டு
வாழாதே மனிதா!
நாம் என்று
பொதுநலனோடு வாழ்ந்துபார்.
பகைமைகள் அழிந்துவிடும்
பாசங்கள் பரவிவரும்.

ஒருபிறவியே உனக்குண்டு
இது பிறவியல்ல
தவம்.... மாதவம்...
தவத்தில் யாரும்
வன்முறையை கற்பதில்லை.

மாதவம் மேற்கொள்ளும் மாமனிதா
இனியும் வேண்டாமே தீவிரவாதம்
வன்முறையை ஒழித்து
வல்லமையை அடைந்திட
வாழ்ந்து பார்ப்போம்.

எழுதியவர் : ஹரிணி கார்த்தி (27-May-12, 7:25 pm)
பார்வை : 240

மேலே