27.5.12-போகிற போக்கில்..! பொள்ளாச்சி அபி

சமீபத்தில் எதேச்சையாக ஒரு நண்பரின் செல்போனை வாங்கி இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் பேச வேண்டியதிருந்தது.அப்போது அந்த நண்பரின் பெயருடன் சேர்த்து அவருடைய இரத்தத்தின் வகையைக் குறிக்கும் விதத்தில்-உதாரணமாக ரமேஷ்.0+ve -என்று பதிவு செய்து வைத்திருந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது பல்வேறு வசதிகளைப் பதிவு செய்யும் வித்தில் தற்போது செல்போன்கள் கிடைக்கின்றன.அதில் பெயர்களை நீளமாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.இடமிருப்பதைப் பொறுத்து நண்பர்களின் பெயர் அவரது இரத்தவகையையும் பதிவு செய்து வைப்பதால் விபத்து உட்பட அவசரகாலங்களில் யாருக்கேனும் இரத்தம் தேவைப்படும்போதோ அல்லது அவருக்கேகூட தேவைப்படும்போதும் உடனடியாக இரத்தம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யமுடிகிறது என்று தெரிவித்தார்.
தற்போது பெரும்பாலானவர்கள் பாட்டு உட்பட பொழுதுபோக்கு அம்சங்களை தங்கள் செல்போனில் பதிவுசெய்து வைத்துக்கொண்டு பொதுஇடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மத்தியில் நண்பரின் செயல் எனக்கு மிகவும் நல்ல ஏற்பாடாகவே பட்டது.அதிலிருந்து நானும் எனது நண்பர்களின் பெயருடன் இரத்தவகையினை பதிவு செய்துவருகிறேன்.இதற்கு முன்பே உங்கள் செல்போனை அவ்வாறு பயன்படுத்திவருபவர் என்றால் உங்களுக்கு எனது தலைதாழ்ந்த வணக்கங்கள்.அப்படியில்லையெனில்..உருப்படியாய் நீங்களும் பின்பற்றலாமே..!.

மேலும் உங்கள் பெயரை எங்கேனும் எழுத வேண்டியிருந்தால்,வாய்ப்புகள் இருக்கும் இடத்தில் உங்கள் இரத்தத்தின் வகையையும் சேர்த்து எழுதி வைக்கலாம்.நீங்கள் எழுதும் ஒரு கவிதையின் ஆழ்ந்த ஈடுபாட்டுடன். அது அடுத்தவருக்கு உதவும் வகையிலும் அமைந்து விட்டால் அது நீங்கள் எழுதிய உங்கள் பெயர் எனும் கவிதைக்கு வெற்றியை கொண்டு வந்து சேர்க்காதா.?
அந்த பழக்கம் உங்களுக்கும் அடுத்தவருக்கும் எப்போதும் உதவும் காரணமாகவும் இருக்கும். என்ன நண்பர்களே சரிதானா.?.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (27-May-12, 9:05 pm)
பார்வை : 270

மேலே