பயம்

நிழல்களுக்கு பயந்து
ஒளியினை விற்றேன்
பழிகளுக்கு பயந்து
நட்பினை விற்றேன்

கனவுக்கு பயந்து
கண்ணுறக்கம் விற்றேன்
ஏமாற்றப் படுவேனென்று
ஆசைகள் விற்றேன்

பிரிவுக்கு பயந்து
காதலை விற்றேன்
மரணத்தின் பயத்தால்
வாழ்வையே விற்றேன்

எழுதியவர் : வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் (27-May-12, 9:50 pm)
சேர்த்தது : crvenkatesh
பார்வை : 179

மேலே