நீ இல்லாத நான்

கண்ணீரின் துணைகொண்டு
காயங்கள் கழுவுகின்றேன்
காயநெஞ்சை காகிதமாக்கி
கவிதைகள் எழுதுகின்றேன்

நீபிரிந்த பின்னர் வாழ்வின்
நாட்களும் பாரமாச்சு
நீதான்என் பக்கமில்லையுன்
நிழலுமேன் தூரமாச்சு
உன்முகம் காணாதெனக்கு
உறக்கங்கள் மறந்துபோச்சு
கன்னியுன் பிரிவின்வலியால்
கண்களும் ஈரமாச்சு

உன்னைஎன் கண்களுக்குள்ளே
உட்கார்த்தி வைத்தேன் நானும்
என்கண்ணை முள்ளால்குத்தி
எனைகாயம் செய்தாய்நீயும்
மென்கண்கள் வலியில்துடித்து
மெதுவாக திறந்தபோது
கண்ணீரின் வழியேநீயும்
கனவாக கரைந்து சென்றாய்





கனவுகள் கரைந்ததாலே
கண்களும் உறங்கவில்லை
நினைவுகள் துணையைகொண்டு
நாட்களை நகர்த்துகின்றேன்
கழிந்திட்ட நாட்களெல்லாம்
கண்முன்னர் படமாய்வரவும்
இழப்பின் சுமைக்குக்கீழே
இன்னமும் அழுந்துகின்றேன்

கண்ணீரின் துணைகொண்டு
காயங்கள் கழுவுகின்றேன்
காயநெஞ்சை காகிதமாக்கி
கவிதைகள் எழுதுகின்றேன்

எழுதியவர் : வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் (27-May-12, 9:53 pm)
சேர்த்தது : crvenkatesh
பார்வை : 191

மேலே