காதல் பயணம்

என் முதல் காதல் பயணம்
எங்கள் முதல் சந்திப்பே அந்தப்
பேருந்துப் பயணத்தின் போது தான்.
இடறி விழுந்த எனக்கு கை கொடுத்தான்.
இறுதிவரை உடன் வருவான் என்று
எண்ணினேன் .
பரிமாறிக் கொண்டோம் பயணச் சீட்டை
மட்டுமல்ல - பார்வைகளையும் தான்.
நெருக்கமானது பேருந்து இருக்கை
மட்டுமல்ல - எங்கள் உறவும் தான்.
அழகிய கவிதையாய்த் தெரிந்தது
கூட்ட நெரிசலில் தெரிந்த அவன்
பாதி முகம்.
தொலைபேசியும் எங்கள் தூதுவன்
ஆனான்.
எங்கள் பேருந்துக் காதலுக்கு
ஒன்றரை வயதானது.
யாருமறியா ஓர் இரவில் என் வீட்டிற்கு
வந்தான் -
வந்தவன் திருடிவிட்டுச் சென்றான்.
அடுத்த நாள் ,
அதே பேருந்து, அதே இருக்கைகள்,
தனிமையில் நான்.
வேகமாய் ஓடியது - பேருந்து
மட்டுமல்ல என் நாட்களும் தான்.
இறுதியில் கண்டுபிடித்தேன்.
பழகும்பொழுது அழகிய கவிதையாய்த்
தெரிந்த அவன் என் படுக்கையை
மட்டும் பகிர்ந்து விட்டுச் சென்ற பின் தான்
தெரிந்தது
" எல்லா கவிதைகளும் அழகானவையல்ல "
என்று .