எய்ட்ஸ் ...!

ரத்தத்தில் ரகசிய ஒற்றன்...இவன்
மரணக்கோட்டை மன்னனின் ..
விசுவாசமான ஊழியன் ..!?

பாவத்தின் சம்பளம் மரணம் ...
இது பைபிள் வாசகம் ...!
முறைதவறிய காமத்தின் சம்பளம் எய்ட்ஸ் ..
இது வைரஸின் வாதம் ...!

காகித மலர்கள் சிந்திய
கசப்பு தேன்துளிகள் ...!
வக்கிர வண்டுகள்
வாங்கிய இனிப்பு விஷத்துளிகள் ..!

எமராஜனின் செல்லப்பிள்ளை ..
உடலில் புகுந்துவிட்டால் ...
நோய்களோ கொள்ளை ..!

மனிதனின் காம ஆசைக்கு
மரணத்தின் மணி ஓசை ..!

ஒவ்வா உறவில் ...
கூடு விட்டு கூடு பாயும் ..
மரண ஓலை..!

எழுதியவர் : இரா.அருண்குமார் (30-May-12, 9:46 pm)
பார்வை : 229

மேலே