விடியலைத்தேடி ....!

விடியலைத்தேடி நாங்கள் ...வெகுகாலமாய் நடையாய் நடந்துகொண்டிருக்கிறோம் ..!
என்ன செய்ய .. நாங்கள் ஏழைகளாம்....?
ஏளனங்கள் மட்டுமே ...எதிர்திசையில்
எங்களை நோக்கி வெகுவேகமாய் ..!?
விடியலை வாங்க ...
லஞ்சமாய் கொடுப்பதற்கு எங்களிடம் இருப்பது
எங்களுக்கு சிலவேளைகளில் கிடைக்கும் ..
நிம்மதி உறக்கங்கள்தான்...!
எங்கள் குடிசை முன்பு வாகனங்கள் அணிவகுப்பு ..
சாலைகள் எல்லாம் சலவை செய்த பளபளப்பு ..
முகங்களில் எல்லாம்
காந்தி தாத்தாவின் மினுமினுப்பு ....!
குடிசைகள் கூட உடைகளோடு ..!
ஒ இது தேர்தல் காலம் ...!
வசந்தகாலம் முடிந்து ..இலையுதிர் காலத்தில்
குடிசைகள் முன்பு பெருச்சாளிகள் படையெடுப்பு ..
சாலைகள் எல்லாம் ..சேற்றில் கலவைகளாய்...
முகங்கள் எல்லாம் ...வேர்வைகளின் பிசுபிசுப்பு ..
கட்டிய கோவணத்தில் கூட கிழிசல்கள் மறைப்பு ..!
இப்படியே வாழ்க்கை சக்கரம் ...சுழல்கிறது ...
வண்டிஎனும் வாழ்கையை தொலைத்துவிட்டு..!
ஒவ்வொரு விடியலிலும் ...எங்கள் வாழ்க்கை
விலைபேசி வாங்கப்படுகிறது ...என் செய்ய ..
அடுத்த வேலை பசிக்குமுன் ...நாங்கள்
தோற்று போய்தானே நடக்கிறோம் ...
அடுத்த விடியலை தேடி ..?!

எழுதியவர் : இரா.அருண்குமார் (2-Jun-12, 11:38 am)
பார்வை : 435

மேலே